கெத்தா வந்தான் சங்கத்தமிழன் – ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் சங்கத்தமிழன்.
இந்தப் படத்தில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி ‘சங்கத்தமிழன்’ படத்தைத் தயாரித்துள்ளார்.
இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , படத்தொகுப்பினை பிரவீன் கே.எல் மேற்கொண்டுள்ளார் .
இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது .
இப்படம் இன்று (நவம்பர் 15) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் படத்தைத் தயரித்திருக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தர வேண்டிய பழைய பாக்கிகள் உரிய முறையில் கொடுக்கப்படாததால் கடைசி நேரத்தில் படம் வெளியாகவில்லை.
அதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர்.
படத்தின் சிக்கல்கள் வேகமாகப் பேசி சரி செய்து நேற்று இரவு படம் வெளியானது.
பல ஊர்களில் இன்று காலை படம் வெளியாகியுள்ளது.
இதனால், ஒருத்தன் வரணும்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்னு வச்சிக்கோ, நீ என்ன தான் கதவைச் சாத்தி தாழ்ப்பாள் இழுத்து பூட்டுப் போட்டாலும் பூட்டு லாக் ஆகாது
கெத்தா ஜெயிக்கவந்துட்டான் இந்த சங்கத்தமிழன்
என்று விஜய்சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.











