சினிமா செய்திகள்

நீதிமன்றம் செல்லும் முன் சங்கீதா எடுத்த கடைசி முயற்சி – விஜய் சிக்கலில் புதியதகவல்

முன்​னணி நடிகரும், தமிழக வெற்​றிக்​ கழகம் கட்சியின் தலை​வரு​மான விஜய்​யிட​மிருந்து தனக்கு சிறப்புத் திரு​மணச் சட்​டத்​தின்கீழ் மணவிலக்குக் கோரி, அவரது மனைவி சங்​கீதா செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில்…

எனக்​கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10 ஆம் தேதி இங்​கிலாந்தில் பதிவுத் திரு​மணம் நடந்​தது.அதன்​பிறகு எங்​களது திரு​மணம் இந்து முறைப்​படி 1999 ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னை ராஜா முத்​தையாமன்​றத்​தில் நடந்​தது. எனது கணவர் தற்​போது தவெக என்கிற கட்​சி​யைத் தொடங்கி அதன் தலை​வ​ராக உள்​ளார்.

எங்​களுக்கு ஜேசன் சஞ்​சய்​ (25) என்ற மகன், திவ்யா சாஷா(20) என்ற மகள் உள்ளனர். தொடக்கத்​தில் எங்​களது இல்லற வாழ்க்​கை​ பிரச்சினையின்றி சுமூக​மாக சென்​றது. படப்​பிடிப்பு இல்​லாத கால​கட்​டங்​களில் நாங்​கள் குடும்​பத்​துடன் இங்​கிலாந்​துக்கு
சென்​று​விடு​வோம்.

அதே​போல நானும் படப்​பிடிப்புத் தளங்​களுக்​கும், திரைப்​படங்​கள் தொடர்​பான நிகழ்​வு​களி​லும் பங்​கேற்​றுள்​ளேன். சில நேரங்​களில்
எங்​களுக்​குள் அவ்​வப்​போது சிறுசிறு பிரச்​சினை​கள் ஏற்​பட்​டாலும் அதை நாங்​களே சரிசெய்​து​கொண்டு வாழ்க்கையை சீராக நடத்தி
வந்​தோம்.

ஆனால் கடந்த 2021 ஏப்​ரல் மாதம் எனது கணவருக்​கும், ஒரு நடிகைக்​கும் திரு​மணத்தை மீறிய தொடர்பு இருந்​தது தெரிய​வந்​தது. இதனால் மனதள​வில் பாதிப்​படைந்​தேன். அதன்​பிறகு அந்த உறவைத் துண்​டித்து விடு​வ​தாக விஜய் உறு​தி​யளித்தார்.

ஆனால் அதன்​படி அவர் நடந்துகொள்​ள​வில்​லை. இந்​தப் பிரச்​சினையை சுமூக​மாகப் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டுவர எடுத்த
முயற்​சிகள் எது​வும் பலனளிக்​க​வில்​லை. குழந்​தைகள் எதிர்காலம் கருதி நானும் அமைதி காத்து வந்​தேன்.

ஆனால் விஜய் என்​னுடன் இருந்த திருமண பந்​தத்தை அறவே துண்​டித்​துக் கொண்​ட​தால் மனரீதி​யாக​வும், உடல் ரீதி​யாக​வும் பாதித்து தனிமைப்​படுத்​தப்​பட்​டேன்.

இந்​நிலை​யில் மனைவி என்ற முறை​யில் எனக்​கும், குடும்​பத்​துக்​கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவி​களை​யும் எனது கணவர் விஜய் நிறுத்தி விட்​டார். தற்​போது எங்​களுக்​குள் எந்த உறவும் இல்​லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்​டும்.

இவ்​வாறு அந்த மனு​வில் சங்​கீதா கூறி​யிருக்கிறார்.

இ்ந்த மனுவை விசா​ரித்த செங்​கல்​பட்டு முதன்மை அமர்வுநீதி​மன்​றம், இந்த வழக்கை செங்​கல்​பட்டு குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றி உத்​தர​விட்​டுள்​ளது. அதன்​படி இந்​த வழக்​கு ஏப்​ரல் 20 ஆம் தேதி வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

இந்த வழக்கு தொடருவதற்கு முன்பு, நீதிமன்றத்துக்கே வராமல் அதேசமயம் சட்டப்படி ஒரு தீர்வை எட்ட சங்கீதா முயன்றதாகச் சொல்லப்படுகிறது.

அதற்காக,டிசம்பர் முதல்வார்த்தில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தை அணுகியிருந்தார் என்றும்,அங்கு அவர் முறையீட்டின் பேரில் விஜய்யை விசாரணைக்கு அழைத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அந்த ஆணையத்தின் அழைப்பை நிராகரித்த விஜய், என்னால் வர முடியாது, உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்க்ள் என்று சொல்லிவிட்டாராம்.அதன் பின்னர்தான் நீதிமன்றம் செல்லும் முடிவை சங்கீதா எடுத்தார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts