காலா படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரஜினி நடித்திருக்கும் காலா படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்திருக்கிறார்.
மருமகனின் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார் என்றதுமே, இது மகளுக்கான சீதனம் என்று எல்லோரும் பேசத் தொடங்கினார்கள்.
ஆனால், உண்மை அப்படி இல்லையாம். இந்தப்படத்தில் நடிக்க எனக்கு இவ்வளவு சம்பளம் என்று ரஜினி கேட்டு வாங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
படத்தில் நடிக்க ஐம்பது கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம் ரஜினி. அத்தொகைக்கான வரி ஒன்பது கோடியாம். அதையும் தயாரிப்பு நிறுவனமே கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டார்களாம்.
படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்ட நிலையில் பேசியபடி மொத்த சம்பளத்தையும் ரஜினிக்கு தனுஷ் கொடுத்துவிட்டாரா? என்றால் இல்லை.
பொதுவாக நடிகர்கள் படத்தின் குரல்பதிவின்போது (டப்பிங்) மொத்தப் பணத்தையும் வாங்கிவிடுவார்கள். ஆனால் இந்த இடத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்த ரஜினி, சம்பளப்பாக்கி இருந்த போதும் படத்தின் குரல்பதிவை முடித்துக்கொடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.










