ஏப்ரல் 27 ஆம் தேதி காலா ரிலீஸ் ஆகாது
மார்ச் 1,2018 முதல் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் ஒரு மாதமாகத் தொடர்கிறது.
ஆனால் இன்னும் முடிவை நோக்கி ஒருபடி முன்னேற்றம் கூட ஏற்படவில்லை என்கிறார்கள்.
இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக கமல், ரஜினி போன்ற முன்னனி நடிகர்கள் நிறைவாக இல்லை. வேலைநிறுத்தத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரஜினி வெளிப்படையாக அறிவித்தார்.
அவர் நடித்த காலா பட வெளியீட்டுக்குச் சிக்கல் என்பதால் அவர் வேலைநிறுத்தத்துக்கு எதிராகப் பேசுகிறார் என்று சொல்லப்பட்டது.
அதற்கேற்றாற்போல காலா படத்தைத் தயாரித்திருக்கும் தனுஷ் நிறுவனம், காலா படத்தின் தணிக்கைக்கு தடையில்லாச் சான்று கேட்டு சண்டை போட்டது.
யார் எதிர்த்தாலும் காலா படத்தைத் திட்டமிட்டபடி ஏப்ரல் 27 ஆம் தேதி திரைக்குக்
கொண்டுவருவோம் என்று அப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், காலா படத்தை வெளியிடவிருக்கும் லைகா நிறுவனம், இந்த வேலைநிறுத்தத்திலும் வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளிலும் எங்களுக்கு முழு உடன்பாடு என்று அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் இவ்வாறு அறிவித்திருப்பதால் காலா படம் அறிவித்தபடி ஏப்ரல் 27 இல் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டது.











