கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நடிப்பது இதனால்தான்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நயன்தாரா. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படமும் அப்படித்தான்.
இந்தப் படத்தை புதுமுகம் நெல்சன் இயக்குகிறார். சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்டு நின்று போன வேட்டை மன்னன் படத்தை இயக்கியது இவர்தான். அந்தப்படம் வராததால் இன்னும் புதுமுகமாகவே இருக்கிறார்.
இந்தப் படத்தில் நயன்தாராவின் பெயர் கோகிலா. அதனால் படத்தின் பெயர் ‘கோலமாவு கோகிலா’.
வறுமையில் வாடுகிற குடும்பத்துக்காக உழைக்கிற நாயகன், ஏதாவதொரு வில்லனிடம் போராடி வெற்றி பெறுவார். அதை அப்படியே ஒரு நாயகி செய்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப்படத்தின் கதை என்கிறார்கள்.
அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருக்கிற கோலமாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. வாசலில் கோலம் போடுகிற மாவு என்பதைத் தாண்டி அதற்கு இன்னொரு அர்த்தம் இருக்கிறது, அதுதான் இந்தப்படத்தின் பலம் என்கிறார்கள்.
அதற்காகத்தான் நயன்தாரா இந்தப்படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.











