சினிமா செய்திகள்

உண்மையான ஹீரோவாக இருக்கவேண்டும் – விஜய்க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் விஜய்க்கு ரூ. 1 இலட்சம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்.அந்த அபராத தொகையை தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கவும் உத்தரவிட்டது.

அதோடு, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது.வரி என்பது நன்கொடையல்ல; நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாயப் பங்களிப்பு.
சமூகத்துக்குப் பாடுபடுவதாகக் காட்டிக்கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உயர்நீதிம்னறம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இச்செய்தி வெளியானதும், வரி கட்டுங்க விஜய் என்கிற குறிச்சொல்லுடன் ஏராளமானோர் விஜய்யை விமர்சித்து ட்வீட் செய்துகொண்டிருக்கின்றனர். உடனே நாங்கள் விஜய்யை ஆதரிக்கிறோம் எனும் பொருளில் வி சப்போர்ட் விஜய் என்கிற குறிச்சொல்லுடன் அவருக்கு ஆதரவாகவும் பலர் ட்வீட் செய்துவருகின்றனர்.

Related Posts