சினிமா செய்திகள்

ரஜினி கமல் படங்களைப் பின்பற்றிய விஜய் படம்

மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார் விஜய். கடந்த ஜனவரி மாதம் முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் ‘தளபதி 63’ படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘ஆரண்ய காண்டம்’, ‘மாயவன்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஜாக்கி ஷெராஃப், தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’, விக்ரம்பிரபு நடிக்கும் ‘வால்டர்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

ரஜினியின் 2.ஓ படத்தில் அக்‌ஷய்குமார் நடித்தார், கமலின் இந்தியன் 2 படத்தில் அபிஷேக்பச்சன் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவற்றைத் தொடர்ந்து விஜய் படத்திலும் இந்திநடிகர் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts