December 9, 2021
சினிமா செய்திகள்

நயன்தாராவின் புதிய படம் – பெயர் மற்றும் விவரங்கள்

நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.இவற்றில், நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறதாம்.

இவற்றிற்கடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.

ஆனால், இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம்வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில் அவ்விரு படங்களும் உருவாகவிருக்கிறதாம்.

முதலில் தொடங்கவிருக்கும் படத்தை பட்டாபட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கவிருக்கிறாராம்.

இன்னொரு படத்தை புதுஇயக்குநர் விக்னேஷ் என்பவர் இயக்கவிருக்கிறாராம். அறம் படம் போல நயன்தாராவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அப்படத்தின் கதை அமைந்திருக்கிறதாம்.

அக்கதைக்கு ஆக்சிஜன் என்று பெயர் வைத்திருக்கிறாராம் இயக்குநர் விக்னேஷ். அதேபெயரில் படம் எடுப்பார்களா? அல்லது வேறு பெயர் வைப்பார்களா? என்பது இனிமேல்தான் தெரியும்.

Related Posts