September 15, 2026
Uncategorized

மனைவிக்குக் கண்ணீரால் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார்.

தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது…..

“18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்”.

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts