சினிமா செய்திகள் நடிகை

ஒன்றரை ஆண்டுகளில் பெற்ற புகழை ஒன்றரை நிமிட ட்ரெய்லரில் இழந்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஓவியா. நேர்மறை எண்ணங்களையும் நற்குணங்களையும் வெளிப்படுத்தியதாலேயே அவருக்கு அவ்வளவு புகழ் கிடைத்தது. அதோடு ஆண் பெண் பேதமின்றி ஏராளமான ரசிகர்களும் கிடைத்தார்கள்.

அந்நிகழ்ச்சிக்குப் பின்னான ஒன்றரை ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த வரவேற்புகளை ஒன்றரை நிமிட முன்னோட்டத்தில் இழக்கவிருக்கிறார்.

ஆம், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 90 எம் எல் என்கிற படத்தின் முன்னோட்டம் பிப்ரவரி 8 அன்று வெளியானது.

முற்றிலும் வயதுவந்தோருக்கான படமாக அமைந்திருக்கும் அப்படத்தின் முன்னோட்டத்தில் ஓவியா பேசும் வசனங்கள் நடிப்பு ஆகியன பலத்த எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு என் குழந்தை ஓவியாவின் செய்திகளை விரும்பிப் பார்க்கிறாள், அவளுக்கு இந்தப்படத்தின் முன்னோட்டத்தை எப்படிக் காட்டுவது? என்று புலம்புகிறார் ஒரு தந்தை.

நிறைய பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் ஓவியா, இதுபோன்ற படங்களில் நடிக்கலாமா? என்கிற விமர்சனங்களும் வருகின்றன.

அப்படத்தை இயக்கியிருப்பவரும் ஒரு பெண் தான். ஆபாசப்படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கலாம்,ஆனால் அது தொடராது, இதற்கு முன் அதுபோல் படமெடுத்த இயக்குநர்கள் என்ன ஆனார்கள்? என்று திரும்பிப்பாருங்கள் என்கிற விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

அந்தப்படத்தின் முன்னோட்டம்…

Related Posts