விஜய் 63 படத்தின் கதை திருட்டுக்கதை என்று சொல்லமுடியாது எப்படி?
இயக்குநர் அட்லீ விஜய்யை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் தொடங்கியதிலிருந்தே பல சர்ச்சைகள்.
பொதுவாகவே அட்லீ கதைகளை அல்லது பட்னக்களைக் காப்பி அடிப்பவர் என்கிற இமேஜ் ஏற்பட்டுவிட்டதால், இந்தப்படம் தொடங்கிய போதே இது யாருடைய கதை? என்று பலரும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
அக்கூற்றுகளை மெய்ப்பிக்கும் விதமாக, செல்வா என்பவர் இது என்னுடைய கதை என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதன் விசாரணை ஜூன் பத்தாம் தேதி வரவிருக்கிறது.
இந்நிலையில் இந்தக்கதை குறித்து மேற்கொண்டும் சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்காக ஒரு வேலை நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அது என்ன?
2007 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற சக் தே இந்தியா எனும் இந்திப்படத்தின் தமிழாக்க உரிமையை வாங்கியிருக்கிறார்களாம்.
அந்தப்படத்தில் ஹாக்கி என்றால் இந்தப்படத்தில் கால்பந்து என்று மாற்றிக்கொண்டதாகச் சொல்லப்போகிறார்களாம்.
சட்டப்படியான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக மட்டுமே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறதெனச் சொல்கிறார்கள்.
திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிற இவ்விசயம் உண்மையா? அல்லது வதந்தியா? எனப்து சில தினங்களில் தெரிந்துவிடும்.













