தீவிர அரசியலில் இறங்குகிறார் தயாரிப்பாளர் சஷிகாந்த்
2010 ஆம் ஆண்டு வெளீயான தமிழ்ப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்த தயாரிப்பு நிறுவனம் ஒய் நாட் ஸ்டியோஸ்.
அதன்பின், தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பல திரைப்படங்களை அந்நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இறுதிச்சுற்று,விக்ரம்வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் உரிமையாளர் சஷிகாந்த். இவர் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும் முன்னாள் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்த இஏபி.சிவாஜியின் மகன்.
இவர் வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளராக இருக்கும் இவர் தீவிர அரசியலில் இறங்கவிருக்கிறாராம்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடவிருக்கிறாராம்.
அதுதொடர்பான பேச்சுகள் தற்போது நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.











