ஆயுர்வேத சிகிச்சையில் சிம்பு
கொரோனா காரணமாகத் தடைபட்டிருந்த சிம்பு நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாம்.
இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் அந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் சிம்பு கலந்து கொள்ளமாட்டாராம். படப்பிடிப்பு தொடங்கிச் சில நாட்கள் கழித்து அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.
ஏனெனில், சிம்பு கடந்த இருவாரங்களாக கேரளாவில் ஆயுர்வேதத் சிகிச்சையில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதை முடித்துவிட்டு வர இன்னும் ஓரிருநாட்கள் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் சுசீந்திரன் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் கழித்து அவர் கலந்துகொள்வார். இப்படத்தின் படப்பிடிப்பை மொத்தமாக முடித்துவிட்டு மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.











