காலா பட பேனரை விஜய் ரசிகர்கள் கிழித்தார்களா? – சென்னையில் பரபரப்பு
சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டு இருந்த காலா பேனரை யாரோ சிலர் கிழித்திருக்கிறார்கள்.
விஜய் பிறந்தநாளையொட்டி நேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த விஜய் ரசிகர்கள் கிழித்ததாக்க் குற்றச்சாட்டு சொல்லபடுகிறது.
யாரோ சில நபர்கள் மேலே ஏறி காலா பட பேனர் கிழிக்கிறார்கள்.அதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமுக வளைதளங்களில் உலாவ விட்டதால் இது பரபரப்பானது.
இதனை கண்டித்து ட்விட்டர் சமுக வளைதளத்தில் பல்வேறு ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் ரசிகர்கள் இதைச் செய்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்றாலும் விஜய் பிறந்தநாளன்று நடந்ததால் அவருடைய ரசிகர்கள் மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டுவிட்டது என்கிறார்கள்.











