செய்திக் குறிப்புகள்

மாணவி அனிதா வேடத்தில் நடிக்க பிக்பாஸ் ஜூலிக்கு எதிர்ப்பு

இயக்குநர் அஜய் இயக்கத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்கும் “DR.S.அனிதா MBBS” திரைப்படம் ஜூன் 22 அன்று பாடல் பதிவுடன் தொடங்கியது.

இத்திரைப்படத்தை ரன்ஹார்ஸ் நிறுவனம் சார்பில் அஜய் மற்றும் ஆர்ஜே மீடியா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தினா இசை அமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு செல்வா
ஒளிப்பதிவாளராகவும், பி.சி.மணிவர்மா கலைஇயக்குநராகவும்,
ஆனந்தலிங்ககுமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர்.

இப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் வர்ஷா ஒரு பாடலை பாடியுள்ளார்.

இப்படத்தில் மாணவி அனிதா கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் ஜூலி நடிக்கிறார்.

இப்படத்தை பற்றி இயக்குநர் அஜய் கூறுகையில்…

இந்தப் படத்தில் நாயகியாக ஜூலியை நடிக்கவைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இத்திரைப்படத்தை பார்த்தபிறகு அவர்கள் கூறியது தவறு என்று
உணர்வார்கள்.

வணிக ரீதியான வெற்றிக்காவோ பணம் பண்ணும் நோக்கிலோ இப்படத்தை நான் இயக்கவில்லை.மருத்துவப் படிப்பு படிக்க முழு தகுதி இருந்தும் நம் கல்வி முறைக்குச் சிறிதும் பொருந்தாத ஒரு தேர்வுமுறையால் மாணவி அனிதாவிற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என்ற நோக்கமே காரணம்.

இத்திரைப்படம் தேசிய விருதை கண்டிப்பாக வாங்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts