கவின் நடிக்கும் புதிய படம் – விவரங்கள்
லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.இந்தப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.மூன்றாவது இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் படம்.
இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எழிலரசு ஸ்டார் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
இம்மூன்று படங்களின் படப்பிடிப்புகள் மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், புதியபடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கவின். இந்த முறை இன்னும் ஒருபடி மேலே போயிருக்கிறார் கவின்.
இதற்கு முந்தைய படம் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் படம் என்றால் இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் புதிய படத்தை, நெல்சன் திலிப்குமாரைவிடப் பன்மடங்கு புகழ்பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கிறார்.
புது இயக்குநர் விக்ரனன் அசோகன் என்பவர் எழுதி இயக்குகிறார்.
சூர்யா, சிம்பு, அஜீத், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடும் கெளதம்மேனன் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களோடும் பணியாற்றிய தற்போது நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் மண்ணாங்கட்டி படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் முதல்நிலை ஒளிப்பதிவு இயக்குநர் ஆர்.டி.ராஜசேகர் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் புதியவர் என்றாலும் வெற்றிமாறன் தயாரிப்பு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு ஆகியன படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.
அதோடு, தேடி வந்த ஏராளமான கதைகளில் இவர் சொன்ன கதை கவினுக்குப் பிடித்ததால் இப்படத்தை ஒப்புக்கொண்டாராம். அதனால் ஒப்புக்கொண்டது மட்டுமின்றி இப்படத்தின் படப்பிடிப்புக்காகத் தேதிகளையும் சொல்லிவிட்டாராம் கவின்.
அதனால், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.அதோடு, கவினின் திரைப்பயணத்துக்கு இந்தப்படம் பெரும் முன்னேற்றமாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.












