சினிமா செய்திகள்

படத்தின் பெயரையே தவறாக எழுதுவதா? – அஜீத்தின் வலிமை குறித்த விமர்சனம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் சலனப்படம் (மோஷன் போஸ்டர்) இன்று (11.07.2021) மாலை வெளியானது.

இதையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

இரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது, நடிகர் அஜித் குமாரின் இரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் திளைக்கலாம். நடிகர் அஜித்தின் “வலிமை”  படத்தைப் பற்றிய  தகவலுக்காக  நீண்ட காலமாக இரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர். இதனையொட்டி “வலிமை” படக்குழு  இரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் அவர்களுக்கு, விருந்து கொடுக்க முடிவு செய்துள்னர்.  இரசிகர்களின் பேரார்வத்தைத் தணிக்கும் வகையில் “வலிமை” மோஷன் போஸ்டரை,  படத்தின்  முதல் தோற்றத்தை தற்போது  வெளியிட்டுள்ளனர்.

இன்று மாலை  மோஷன் போஸ்டர் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே,  படத்தின் தலைப்பு மற்றும் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகி,  வைரலாக பரவி  வருகிறது, இது உலகளவில் “வலிமை” படத்தின் மீதான இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டும்படி அமைந்துள்ளது

“வலிமை”  படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டுவிட்டது.  இந்த ஆண்டு இறுதியில் “வலிமை” திரைப்படம்  உலகளவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் உலகளவில்  மிகப்பெரும் எதிர்பார்ப்பைக் குவித்திருக்கும் தமிழ்ப் படமான  “வலிமை”  படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் (BayView Projects) மற்றும்  Zee Studios இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில்  ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.  

இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். படத்தில் மிக வலுவான தொழில்நுட்பக் குழுவும் இணைந்து  பணியாற்றியுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு  செய்துள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பாராயன் அமைத்துள்ளார். கே.கதிர்  கலை இயக்கம் செய்ய, , அனு வர்தன் இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், பி.ஜெயராஜ் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படக்குழுவினர் இப்படிச் சொன்னாலும் வெளியில் வேறு மாதிரி விமர்சனங்கள் வருகின்றன. சலனப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருக்கின்றன. அதேசமயம் படத்தின் பெயர் எழுதப்பட்டது குறித்து எல்லோருமே எதிர்மறையாகப் பேசுகிறார்கள்.

படத்தின் பெயர் வலிமை, ஆனால் தமிழில் எழுதப்பட்டிருப்பதோ வவிமை என்று இருக்கிறது. அதாவது லி என்கிற எழுத்து வி என்று இருக்கிறது.

ஒரு தமிழ்ப்படத்தின் பெயரைத் தமிழில் சரியாக எழுதமுடியாத அவலம் இங்குதான் நிலவுகிறது என்கிறார்கள்.

Related Posts