சினிமா செய்திகள்

மோடி அரசை விமர்சிக்கும் காட்டுப்பய சார் இந்தக் காளி

மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களைத் தொடர்ந்து யுரேகா இயக்கியிருக்கும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’.

இந்தப் படத்தில் நாயகனாக ஜெய்வந்த்தும் நாயகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஐராவும் நடித்துள்ளனர்.

மூணார் ரமேஷ், ஆடுகளம் நரேன், இயக்குநர் சி.வி.குமார், கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையாகண்ணதாசன்,அபிஷேக்,யோகி தேவராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டக்காட்சிகள் திரையீடு விழா நடந்தது.

அப்போது பேசிய இயக்குநர் யுரேகா,

தமிழ்நாட்டிற்கு வேலை செய்ய வரும் வட இந்தியர்களால் வரும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

சமீப காலமாக வட மாநிலங்களிலிருந்து பலர் தமிழகத்திற்கு வாழ வருகிறார்கள். அவர்கள் வாழ வரட்டும், ஆனால் ஆள வேண்டும் என நினைக்கக் கூடாது.

இப்போது தமிழ்நாட்டில் தமிழில் கூட பேச முடிவதில்லை.
ஹோட்டலுக்கு சென்றால், டோல்கேட் சென்றால் அங்கு ஹிந்தி பேசுபவன்தான் இருக்கிறான். அவர்கள் தமிழில் பேச முற்படுவதில்லை. ஹிந்திதான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே தமிழ் பேச முடியாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு வருகிறோம். என் ஊரில் நானே தமிழ் பேச முடியவில்லை.

வட மாநில கல்விக் கொள்கையைத் திணித்தார்கள், அதனால் நாம் அனிதாவை இழந்தோம், இப்போது வட மாநிலப் பொருளாதாரக் கொள்கை தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டது. அதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.

பிழைக்க வந்த கூட்டம், இங்கே நம்மை அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

பொருளாதாரம் மார்வாடிகள் கையில் இருக்கிறது. அவர்கள், தமிழர்களுக்கு வாகனங்கள் வாங்க கடன் கொடுத்தும், வேலை வாய்ப்புகளை பெற்றும் இங்கு வசிப்பவர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர்.

இவற்றைப் பற்றி காட்டுப்பய சார் இந்த காளி படத்தில் பேசியிருக்கிறோம். இந்தப்படத்தின் கதை இரண்டாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆனால் இன்றைய தேதிக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கலைப்படைப்பில் பொழுது போக்கு அம்சங்களுடன் மோடி அரசின் தவறான போக்கையும் அதன் விளைவால் தமிழகம் சீரழிவதையும் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது.

Related Posts