சினிமா செய்திகள் நடிகை

முதல்படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடிப்பு எப்படி?

மராத்தி மொழியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சாய்ரட்,அந்தப்படம் இந்தியில் தடக் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி நாயகியாக அறிமுமாகியிருக்கும் முதல் படம். கரண் ஜோஹர் தயாரிப்பு என பல்வேறு அதகள ரண கள குதூகல ஓபனிங்.

4 கோடியில் எடுத்து 50 கோடி அள்ளிய படத்தை 55 கோடியில் எடுத்து 500 கோடி அள்ளுவார்களா தெரியவில்லை எப்படியும் சொதப்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு சென்றவனுக்கு ஏமாற்றம்.

சாய்ராட் அளவுக்கு இல்லாவிட்டாலும் புதிய பாணி அணுகுமுறை. மராத்தியில் நடித்த ரிங்கு அளவுக்கு அழுத்தமான திரைத்தோற்றம் இல்லாவிட்டாலும் அம்மா பெயரைக் காப்பாற்றும் விதமாக தன்னியல்பில் நடித்திருக்கிறார் ஜான்வி. அம்மாவுக்கு கடைசிப் படத்தில் கிட்டிய விருது ஜான்விக்கு முதல் படத்தில் கிட்டினாலும் ஆச்சர்யமில்லை.

சாய்ராட்டின் காத்திரமான சாதிய அரசியலுக்கு பெயிண்ட் தடவி சமாளித்தாலும் இறுதிக்காட்சியில் தியேட்டரை உறைய வைத்துவிட்டார்கள். அரங்கில் ஆண்களும் பெண்களூமாய் அலறல் சத்தம். ஆணி அடித்தாற் போல் அப்படி ஒரு இறுதிக்காட்சி.

– அஜயன்பாலா

Related Posts