ஆர்யாவின் புதியபடம் நாளை தொடக்கம் – விவரங்கள்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி, விருமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் முத்தையா.
இவற்றிற்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் முத்தையா.
அந்தப்படத்தை யானை படத்தைத் தயாரித்த டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார்.
இந்தப்படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகியாக நடித்த சித்திஇதானி நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.
அவருக்கு முன் தமன்னா உட்பட பல நடிகைகளைப் பார்த்திருக்கிறார்கள். சம்பளம் மற்றும் தேதிகள் உட்பட பல காரணங்களால் யாரும் ஒத்துவரவில்லையாம்.
அதனால், அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் நாயகி எனும் பெயர் பெற்றிருக்கும் சித்தி இதானியை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
இப்படத்தின் தொடக்கவிழா மற்றும் படப்பிடிப்பு நாளை தொடங்கவிருக்கிறது.
சென்னை ஆவடி இராணுவ மைதானத்தில் தொடங்கும் படப்பிடிப்பு அங்கேயே சில நாட்கள் நடக்கவிருக்கிறதாம். அதன்பின் தென்மாவட்டங்களில் படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள்.
இந்தப்படம் ஆர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இருக்கட்டும்.










