ரஜினி படத்தில் அதர்வா?
ரஜினி இப்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதற்கடுத்து டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும் அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
டான் இயக்குநருக்குத் தனியாக அலுவலகம் போட்டுக் கொடுத்து வேலைகளைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார்களாம்.
ஆனால், ஐஸ்வர்யா இயக்கும் படம் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், ஐஸ்வர்யா தயாராக்கியுள்ள கதையில் ரஜினிகாந்த் தவிர இன்னொரு இளம்நடிகருக்கும் இடம் இருக்கிறதாம். அந்த வேடத்துக்குப் பல பேரைப் பரிசீலித்து கடைசியில் அதர்வாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அதோடு அந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவேண்டும் என்பது ஐஸ்வர்யாவின் விருப்பம் என்கிறார்கள்.
இவற்றை லைகா நிறுவனர் சுபாஸ்கரனிடம் இணையவழியில் கூறியதாகவும் அவை அவருக்குப் பிடித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
எனவே, இந்தப்படம் நடக்க பெரிதும் வாய்ப்புகள் உள்ளன என்று சொல்கிறார்கள்.
அதேசமயம், இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத வரை எதுவும் உறுதியில்லை எல்லாம் மாற்றத்திற்குட்பட்டது என்றும் சொல்கிறார்கள்.











