கதாநாயகன் ஆகிறார் இயக்குநர் ஷங்கர் மகன் – விவரங்கள்
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உண்டு. இவர்களில் அதிதி இப்போது நடிகையாகிவிட்டார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி.
தன் வாரிசுகளை திரைத்துறையில் விடக்கூடாது என்பது இயக்குநர் ஷங்கரின் எண்ணம் என்பார்கள். ஆனால் வாரிசுகள் அப்படி இல்லை.
அவர்களுக்கு இருந்த ஆர்வம் காரணமாக அதிதி நாயகியாகியிருக்கிறார்.
அடுத்து அவருடைய மகன் அர்ஜித்தும் திரைத்துறைக்குள் வரவிருக்கிறாராம். தொடக்கத்தில் இயக்குநர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் அமெரிக்கா போய் இயக்குநருக்கான படிப்பைப் படித்துவிட்டு வந்தாராம்.அதனால் அவர் இயக்குநராகப் போகிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க யாரும் எதிர்பாரா விதமாக அவரும் கதாநாயகன் ஆகவிருக்கிறாராம்.
இதற்காக என் எஸ் டி எனப்படும் நேசனல் ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனத்திலிருந்து முக்கியமான ஒருவர் ஷங்கரின் வீட்டுக்குச் சென்று அர்ஜித்துக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்துவருகிறாராம்.
அர்ஜித்தை நாயகனாக வைத்து நான் படம் இயக்குகிறேன் என ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் ஷங்கரை அணுகியிருக்கிறார்களாம்.
விரைவில் அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.











