சினிமா செய்திகள்

தனுஷின் 44 ஆவது படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிசம்பர் 15,2019 அன்று தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது.மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க மசாலாப்படமாக உருவாகவுள்ளது.

இந்தப் படத்தில் நாயகிகளாக ராஷிகண்ணா, பிரியாபவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தனுஷுடன் நடிக்க நித்யாமேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று படக்குழு வெளியிட்டது.

அதேபோல், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர்.
என்பதையும் சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்தது.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

அதைத்தொடர்ந்து இன்று மாலையில் இப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்துக்கு திருச்சிற்றம்பலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts