டெட்பூல் அண்ட் வால்வரின் கவுண்ட்டவுன் தொடங்கியது
டெட்பூல் மற்றும் வால்வரின் ஆகிய சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி இரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது.
சமீபத்திய விளம்பரப்படத்தில், இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்ஷன் அதிரடி சண்டையை இரசிகர்களுக்குக் காட்டியுள்ளது.
சூப்பர் வில்லன் சப்ரெடூத் மீண்டும் வால்வரினை எதிர்கொள்ளும்படி இந்த ஆக்ஷன் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
டெட்பூல் கூறியது போல், நாங்களும் மிகப்பெரிய இரசிகர்கள்.
விளம்பரத்தில் பார்த்ததை விட பல மடங்கு பிரம்மாண்டமாக நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என டெட்பூல் மற்றும் வால்வரின் இரசிகர்களின் நம்பிக்கை.
இந்நிலையில், டெட்பூல் & வால்வரின் இறுதி கவுண்டவுன் தொடங்கி இருக்கிறது.இப்போது,மார்வெல் ஸ்டுடியோஸ் ஒரு இறுதி டிரெய்லருடன் பார்வையாளர்களை அசரடித்துள்ளது.
படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பரப் படங்களில் டெட்பூல் & வால்வரின் இருக்கிறார்கள் என்றால் அவர்களுடன் வேறு யாரெல்லாம் இருப்பார்கள் என்பதை நிச்சயம் பார்வையாளர்கள் யூகிக்க முடியும்.
இந்த மிகப்பெரிய சூப்பர் ஹீரோக்கள் சேர்ந்து வருவதை சீக்கிரம் திரையில் பார்க்க இருக்கிறோம்.
மார்வெல் ஸ்டுடியோவின் டெட்பூல் & வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 26 அன்று வெளியாகிறது.











