செய்திக் குறிப்புகள்

ஜில்லா நடிகரும் விவேகம் வில்லனும் இணையும் அரசியல்படம்

கே.வி.ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ்.கே.பாக்யராஜின் பாரிஜாதம்,ராதாமோகனின் மொழி, அபியும் நானும்,மணிரத்னத்தின் ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர்,பாடகர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கும் முதல் படம் ‘லூசிஃபெர் ‘.

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால் மற்றும் ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் விவேகம் புகழ் விவேக் ஓபராய், மாரி 2 புகழ் டோவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய்,சுரேஷ் மேனன், கலாபவன் சாஜன் ஆகியோருடன் பிரித்விராஜ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர்,திரைக்கதை ஆசிரியர், பாடகரான முரளி கோபி இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.

புலிமுருகன் படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலு இந்தப் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் சாதுமிரண்டா படத்திற்கு இசையமைத்த தீபக் தேவ் இப்படத்திற்கு இசையமைக்க, சம்ஜித் முஹமது படத்தொகுப்பினை மேற்கொள்கிறார். கலை இயக்கம் மோகன் தாஸ், சண்டைப்பயிற்சி ஸ்டண்ட் சில்வா, நடனம் தினேஷ் .

இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அரசியல் கலந்த த்ரில்லர் படம்.இந்திய அரசியல் படமாக இருக்கும். இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் அரசியல் தொடர்புகளை இப்படம் பேச இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், கொச்சின்,மும்பை, லட்சதீவு,பிரான்ஸ்,ரஷ்யா ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது .

Related Posts