மனம் விட்டுச் சிரித்து மகிழும் படம் – காத்து வாக்குல ரெண்டு காதல் முன்னோட்டம்
2022 ஆண்டில் இரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்தியத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.
இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, சண்டைப் பயிற்சிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ளார்.
2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இந்நிலையில், ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. வெளியானது முதல் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக,இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை ஆகிய பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது.
அவற்றைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” பாடல் அனைவர் மனதைக் கவர்ந்த பாடலாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று வெளியான முன்னோட்டமும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி வகையில் இயக்கியுள்ள படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.
தமிழ்த் திரையுலகில் காதல் கலந்த நகைச்சுவைப் படங்கள் இல்லையெனும் ஏக்கத்தைப் போக்கும் படி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, அழகான காதல் கவிதையாக, மனம் விட்டுச் சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதை முன்னோட்டம் நிரூபித்துள்ளது என இரசிகர்கள் கூறிவருகின்றனர்.
முன்னோட்டம் காண….











