September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 6)

விமர்சனம்

விமர்சனம்

டபுள் ஆக்குபன்சி – திரைப்பட விமர்சனம்

வித்தியாசமான கதை வித்தியாசமான கதை என்று எல்லாப்படங்களிலும் சொல்வார்கள்.உண்மையிலேயே வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி.இருவர் தங்கும் வசதி எனப்பொருள். இந்தப் பொருளுக்கு மிகப் பொருத்தமான கதை. ஒரே உடல்,ஒரே உயிர்.ஆண்,பெண் என இருவேறு உருவங்கள் அதற்கேற்ற குணங்கள் என்பதுதான் கதை.
விமர்சனம்

ஆட்டி – திரைப்பட விமர்சனம்

ஆட்டி என்றால் தலைவி அல்லது முதன்மையானவள் என்று பொருள்.அப்படி ஒரு தலைவியை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் ஆட்டி. இன்றைக்கு ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு 1970 களில் நடக்கும் ஒரு மலைகிராமத்தில் நடக்கும் கதை.படிப்பில்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்,ஓர் அஞ்சல் நிலையம்,ஒரு காவல்நிலையம் என்றிருக்கும் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை ஆய்வாளர் இசக்கி
விமர்சனம்

ஹபீபி – திரைப்பட விமர்சனம்

தமிழ்த்திரையுலகில் மட்டுமின்றி இந்தியத் திரையுலகிலேயும் இஸ்லாமியர்கள் என்றால் வன்முறையாளர்கள்,பயங்கரவாதிகள்,மாந்தநேயமற்றவர்கள் என்பது போன்ற சித்தரிப்புகள்தாம் 99.99 விழுக்காடு இருக்கின்றன.அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்கள் சகமனிதர்கள் என்று சொல்லும் படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம் ஹபீபி.ஹபீபி என்பது அரபுச்சொல்.இதன் தமிழ்ப்பொருள் அன்பு,காதல் எனப்படும். 1980
விமர்சனம்

பெத்தி – திரைப்பட விமர்சனம்

அஜித்தின் சிட்டிசன் படத்தில் இந்திய வரைபடத்திலேயே இல்லாத கிராமம் என்றொரு கதையை வைத்து இன்றளவும் பேசவைத்திருக்கிறார்கள்.அதேபோல எந்த அரசு ஆவணங்களிலும் இல்லாத கிராமத்துக்கு அங்கீகாரம் பெறப் போராடுகிறார் கதாநாயகன். அதில் பல தடைகள்.அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதைச் சொல்கிற படம்தான் பெத்தி. கிராமத்துக்கு அங்கீகாரம் பெற நாயகன் ராம்சரண் தேர்ந்தெடுக்கும் வழி
விமர்சனம்

பரிமளா அண்ட் கோ – திரைப்பட விமர்சனம்

அம்மா அப்பா இரண்டு மகள்கள் கொண்ட அளவான அன்பான குடும்பத்தின் மீது கொலைப்பழி விழுகிறது. ஏனெனில்,அந்த நபரைக் கொலை செய்துவிடலாமா? என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பதோடு,சந்தர்ப்ப சூழ்நிலையும் அதற்கு சாதகமாக இருக்கிறது.அந்தக் குடும்பத்தோடு சேர்த்து மேலும் சிலரும் சந்தேகப் பார்வையில் சிக்குகிறார்கள். உண்மையில் அந்தக் கொலையைச் செய்தது யார்? ஏன்? என்கிற கேள்விகளுக்கான
விமர்சனம்

காட்டாளன் – திரைப்பட விமர்சனம்

வனத்தில் வாழும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை விற்பனை செய்யும் கடத்தல்காரனிடம் பணியாற்றும் கதாநாயகன் ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராகத் திரும்புகிறார்.அதற்குப்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் காட்டாளன். நாயகனாக நடித்திருக்கிறார் ஆண்டனி வர்கீஸ்.அவர் கடத்தல்காரராக நடித்திருக்கும் சுனிலிடம் வேலை செய்யும்போது தீவிர விசுவாசியாகவும்
விமர்சனம்

பிளாஸ்ட் – திரைப்பட விமர்சனம்

கராத்தே பயிற்சியாளரான அர்ஜுன், மனைவி அபிராமி மகள் ப்ரீத்திமுகுந்தன் ஆகியோருக்கும் அந்தப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்.அதோடு அநியாயங்களைத் தட்டிக்கேட்க வேண்டும் என்று சொல்லியும் வளர்க்கிறார்.ஒருகட்டத்தில் பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்களோடு மோதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கிறது பிளாஸ்ட்
விமர்சனம்

வாரண்ட் – இணையத் தொடர் விமர்சனம்

விலங்கு இணையத்தொடரின் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்,கதையின் நாயகனாக நடித்திருக்கும் இணையத் தொடர் வாரண்ட். பெற்றோரின் விருப்பத்துக்காக காவல்துறை பணியில் சேருகிறார் நாயகன்.ஆனால் அந்த வேலை அவர் மனதுக்குப் பிடித்தமானதாக இல்லை.அங்கு அவருக்கு நிறைய கேலிகள் கிண்டல்கள் அவமானங்கள்.இதனால் வெகுண்டெழுகிறார்.அந்த மனநிலையில் அவர் செய்யும் வேலை பெரிய சிக்கலுக்கு ஆளாக்குகிறது.அது என்ன?
விமர்சனம்

கருப்பு – திரைப்பட விமர்சனம்

அறுபது பவுன் நகையைத் தொலைத்துவிடுகிறார் ஒருவர்.அவற்றில் 45 பவுன் மீட்கப்பட்டதாகவும் அதை நீதிமன்றத்தின் மூலம் மீட்டுக்கொள்ளலாம் என்று காவல்துறை கூறுகிறது.அதற்காக ஒரு வழக்குரைஞரை நாடுகிறார் பாதிக்கப்பட்டவர்.அந்த வழக்குரைஞரோ,பாதிக்கப்பட்டவருக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி கதறவிடுகிறார்.நடைமுறை சாத்தியங்கள் அற்றுப் போகும்போது நாடும் கடைசி புகலிடம் கடவுள்.எனவே,நீதிமன்றத்தின்
விமர்சனம்

சட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்

மென்பொருள் துறையில் பணியாற்றும் நாயகன் ஜெய்,ஓர் அமைச்சரின் மகளைக் காதலித்து கரம்பிடிக்கிறார்.அந்த அமைச்சர், மகள் திருமணத்தை முறித்து இன்னொரு திருமணம் செய்ய முனைகிறார்.அதோடு காதல்மண இணையர் தேனிலவுக்குச் சென்ற இடத்தில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.இவ்விரண்டையும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றிற்கான விடையாக வந்திருக்கிறது சட்டென்று மாறுது வானிலை.