தமிழ்த் திரையுலகில் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் புகபெற்றிருக்கும் அனலரசு இயக்கியிருக்கும் படம். பதினெட்டு வயது நிரம்பாத ஒரு பதின்பருவத்தினனை கதாநாயகனாக வைத்துக் கொண்டு ஓர் அதிரடியான சண்டைப்படம் கொடுத்திருக்கிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினரை பட்டப்பகலில் படுகொலை செய்கிறார் நாயகன்
விமர்சனம்
படத்தின் தலைப்பே இது வீடு பற்றிய கதை என்பதைச் சொல்லிவிடுகிறது.அதற்கேற்ப வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் சொந்தவீட்டுக்கனவு மற்றும் அதை அடைவதற்கான அவர்களின் போராட்டம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு படம் அமைந்திருக்கிறது. நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவர் சரத்குமார். அவர் மனைவி தேவயானி. அவர்களுக்கு மகனாக சித்தார்த்,மகளாக மீதாரகுநாத்.வாடகை வீட்டில் குடியிருக்கும்
பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணத்தை கதைக்களமாகக் கொண்ட படத்துக்கு லவ் மேரேஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.30 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத இளைஞர்களின் நிலை, அவர்களின் எண்ணவோட்டம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு ஒரு குடும்பப்படம் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.அதுதான் இந்தப்படம். தேனியில் வசிக்கும் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு 33 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை.
கண்ணப்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாடச் சென்ற போது, திருக்காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற சிவனின் ஒரு உருவமான வாயு லிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் சுவர்ணமுகி
நாட்டில் நடக்கும் மர்மக் கொலைகள் அதை விசாரிக்கும் காவல்துறை என்கிற வழக்கமான அடிப்படைக் கதைக்களத்தை வைத்துக் கொண்டு திரைக்கதையில் பல வியப்புகளைக் கொடுத்திருக்கும் படம் மார்கன். உடலெல்லாம் கறுத்துப்போய் மர்மமான முறையில் மரணிக்கிறார் ஒரு பெண்.சென்னையில் நடக்கும் இதைப் போன்றே மும்பையிலும் நடக்கிறது.இதனால் நாடு முழுதும் பரபரப்பாகிறது.இதனால் மும்பையில் இருந்து சென்னை வருகிறார்
உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வாழ்க்கையைப் படமாக்குவதற்குப் பெரும் துணிவு வேண்டும்.ஏனெனில் அது மிகப்பெரும் கடல்.அதில் எந்துத்துளியைப் படமாக்குவது என்கிற கேள்வி வரும், திகைத்துப் போவோம்.அந்த சவாலை எதிர்கொண்டு திருக்குறள் இயற்றியது மட்டுமின்றி அவர் ஒரு போராளியாகவும் இருந்தார் என்கிற விசயத்தையும் சொல்லியிருக்கிறது திருக்குறள் திரைப்படம். திருக்குறள்
மது உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையானவர்கள் குற்றவாளிகள் தீண்டத்தகாதவர்கள் இழிபிறவிகள் என்கிற பொதுக்கருத்தோட்டம் சமுதாயத்தில் உண்டு.அதனால் மதுவின் தீமைகளை விளக்கி அதற்கு ஆட்பட்டவர்கள் அதிலிருந்து மீளவேண்டும் என்கிற நோக்கத்தோடு நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. மதுக்குடிப்போரை இழிவாக எண்ணும் குணம் படைத்தோரையும் சிந்திக்க வைக்கிற படமாக வந்திருப்பதுதான் குட் டே(நல்ல நாள்). வேலை
திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தனுஷ் கோடீசுவரர் ஆகிறார்.பணத்துடன் உயிராபத்தும் வருகிறது.அவர் எப்படி கோடீசுவரர் ஆனார்? அவருக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பினாரா? என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் படம் குபேரா. ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பிச்சைக்காரர்களைப் பயன்படுத்துகிறார்கள்.பணம் வெள்ளையானதும் அவர்களைக் கொலை செய்துவிடுகிறார்கள்.தனுஷும்
வங்கிக் கொள்ளை, ஒருவரையொருவர் ஏமாற்றுதல், சூழ்ச்சியான முறையில் பணம் சம்பாதித்தல் ஆகியன குறித்து வரும் திரைப்படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்.இவற்றை வைத்துக் கொண்டு ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே இக்குழுவின் எண்ணம். ஒரு பீட்சா கடையில் வேலை பார்க்கிறார் நாயகன் வைபவ்.அந்தக் கடை முதலாளி லிவிங்ஸ்டன்.அவர் சொல்லும் ஒரு
எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய குணநலன் எப்படியிருந்தாலும் அப்பெண் தாய் என்கிற பொறுப்பை அடையும்போது அவள் எப்படி இருப்பாள்? என்பதையும் ஒரு ஆண்மகன் எப்படியிருந்தாலும் தந்தையான பிறகு அவர் எப்படி நடந்துகொள்வார்? என்பனவற்றை நாட்டில் நடக்கும் ஆபத்தான நிகழ்வுகளையும் கோர்த்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் டிஎன்ஏ. காதல் தோல்வியால் மனமுடைந்து குடிக்கு அடிமையான அதர்வாவுக்கும்























