September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 12)

விமர்சனம்

விமர்சனம்

ஜாக்கி – திரைப்பட விமர்சனம்

மதுரை பகுதிகளில் நடக்கும் கிடா சண்டைகள்,அவற்றில் கிடைக்கும் வெற்றி தோல்விகள், அதன் பின்விளைவுகள் ஆகியனவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாக்கி. தானி ஓட்டுநரான நாயகன் யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவர்.பணக்காரரான எதிர்நாயகன் ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையைக் கவுரவமாக
விமர்சனம்

வங்காள விரிகுடா – திரைப்பட விமர்சனம்

நாயகன் குகன்சக்ரவர்த்தி,தற்கொலை செய்து கொள்ளப் போகும் முன்னாள் காதலியைக் காப்பாற்றி அவரோடு குடும்பம் நடத்துகிறார்.அதற்காக ஒரு கொலையும் செய்கிறார்.அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அவை என்னென்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை விவரிக்கும் படம்தான் வங்காள விரிகுடா. வங்காள விரிகுடா என்று பெயர் வைக்கக் காரணம்,பேரறிஞர் அண்ணா, கலைஞர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகிய எல்லோரும் வாழும்
விமர்சனம்

திரெளபதி 2 – திரைப்பட விமர்சனம்

மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர். ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர். கி.பி 1291 இல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின்
விமர்சனம்

மாய பிம்பம் – திரைப்பட விமர்சனம்

இளம் இணையரின் காதலுக்கு எதிரியாக சாதி,மதம்,அந்தஸ்து,பெற்றோர்,உறவினர் எனப்பலர் வருவார்கள்.காதலுக்கு எதிரியாக காதலனே வருவதுதான் மாயபிம்பம் படத்தின் கதை. மருத்துவ மாணவரான நாயகன் ஆகாஷுக்கு நாயகி ஜானகி மீது காதல்.ஜானகியும் அவரை காதலிக்கிறார்.அதேநேரம் நண்பர்களின் தவறான வழிகாட்டுதலால் தவறான முடிவை எடுக்கிறார் கதாநாயகன். அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதுதான் படம். நாயகனாக
விமர்சனம்

தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்

ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் நாயகன் ஜீவா.மக்களுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.அவர்கள் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் வழக்கமுடையவர். இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோர் பக்கத்து வீட்டுக்காரர்கள்.இருவருக்கும் பகை.ஒருவர் வீட்டில் திருமண நிகழ்வு இன்னொருவர் வீட்டில் மரண நிகழ்வு. திருமண முகூர்த்தம் இறுதிச்சடங்கு ஆகிய இரண்டும் ஒரேநேரத்தில் நடந்தாக
விமர்சனம்

வா வாத்தியார் – திரைப்பட விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்தவர் எம்ஜிஆர்.அவர் திரைப்பட நடிகராக இருந்தபோது அவருடைய இரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைப்பார்கள்.அதனால் எம்ஜிஆர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்தக்கதைக்கு வா வாத்தியார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் எம்ஜிஆரின் தீவிர இரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் இறக்கும்போது பிறந்த
விமர்சனம்

பராசக்தி – திரைப்பட விமர்சனம்

1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது. அன்றைய தினம், உள்ளூர் மாணவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொள்ளாச்சி நகரிலும் முழுக்கடையடைப்பு நடைபெற்றது. காலை 10.00 மணி அளவில், பாலக்காடு சாலையில் உள்ள அஞ்சலகம்
விமர்சனம்

தி ராஜா சாப் – திரைப்பட விமர்சனம்

பாட்டி ஜரினாவகாப்புடன் வசித்துவரும் நாயகன் பிரபாஸ், பாட்டியின் நோய்க்கு மருந்தாக பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாத்தா சஞ்சய்தத்தைத் தேடிப் போகிறார்.அந்தத் தேடல் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை எல்லா பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்துக் கொண்டு சொல்ல விழைந்திருக்கும் படம் தி ராஜா சாப். முழுமையான ஆக்சன் ஹீரோவாகிவிட்ட பிரபாஸ்,இந்தப்படத்தில் காதல், சண்டை
விமர்சனம்

மார்க் – திரைப்பட விமர்சனம்

முதலமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தைத் தேடும் பணி மற்றும் ஒரேநாளில் 16 சிறுவர்கள் கடத்தப்படுகிற நிகழ்வு ஆகிய இரண்டைப் பற்றியும் விசாரிக்கிற வேலையில் இறங்குகிறார் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியான நாயகன் சுதீப்.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை வெகுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் மார்க். நாயகனாக
விமர்சனம்

சல்லியர்கள் – திரைப்பட விமர்சனம்

புறநானூற்றில் படித்த தமிழ்வீரத்தை நாம் வாழும் காலத்தில் பார்க்க வைத்து சிங்கள அரசு மற்றும் அதற்கு ஆதரவான பத்துக்கும் மேற்பட்ட அரசுகளை எதிர்த்து எவ்விடத்திலும் அறம் வழுவாமல் தமிழீழத் தாயகத்தைப் பல்லாண்டுகள் ஆண்ட விடுதலைப் புலிகளின் மருத்துவ அணியின் பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது சல்லியர்கள். தமிழீழ விடுதலைப் போரில் தமிழீழ மருத்துவ அணியின் பங்கு மகத்தானது.அவர்களை