விஜய் நடிக்கும் பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னைக்கு அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் இன்று நடைபெறவுள்ளது. சுமார் எட்டாயிரம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள பெரிய அரங்கம் அது. அதில் விஜய் ரசிகர்களுக்கென்று சுமார்
செய்திகள்
இயக்குநர் மணிரத்னம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், அமிதாப் பச்சன், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், கலை இயக்குநராக தோட்டா தரணி பணியாற்றவுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றுவரை அந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு செய்தித்தாள்
இயக்குநர் சீனுராமசாமி இப்போது விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்துக் கூறியுள்ளார் சீனுராமசாமி. மாமனிதன் படத்துக்கு அடுத்து நான் ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறேன் என்று கூறியுள்ளார். அம்பேத்குமார் இப்போது, ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா
மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான் சைரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். மிகப்பெரிய பொருட்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் கலந்துகொண்டவர் என்எஸ்கே ரம்யா.கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணனின் பேத்தியான இவர் பிரபல பாடகியும் ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மிகவும் வரவேற்பைப் பெற்றார்.அவரின் குணத்தையும் பல ரசிகர்கள் பாராட்டினார்கள். இந்த நிலையில் அவருக்கும், நீலகுயில் உள்ளிட்ட சில நெடுந்தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சத்யாவுக்கும் திருமணம்
காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
விஜய் நடிக்கும் பிகில் படம் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் பாடல்கள் வெளியீடு செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய், அப்படியே விமான நிலையம் சென்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாராம். குடும்பத்துடன் பத்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தேதிகள்
துருவங்கள் 16 படத்தின் மூலம் எல்லோராலும் கவனிக்கப்பட்ட இயக்குநர் கார்த்திக் நரேன். அதற்க்டுத்து இவர் இயக்கிய, ‘நரகாசூரன்’ படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அதற்கடுத்து நாடகமேடை எனும் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அதை அப்படியே வைத்துவிட்டு மாஃபியா எனும் படத்தைத் தொடங்கினார். அருண்விஜய், பிரியாபவானிஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர்
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இப்படிப்பட்ட புதுமுயற்சியில் உருவாகியிருக்கும்





















