சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தின் உரிமையைக் கைப்பற்றியது சன் டிவி

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளையை ஒட்டி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார்
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. 

படம் தொடங்கிய சில நாட்களிலேயே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேசப்படும் தகவல்கள் படி சுமார் 32 கோடி ரூபாய் கொடுத்து இந்த உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விஜய்யுடன் விஜய்சேதுபதியும் இருப்பதால் இவ்வளவு அதிக விலைக்கு இப்படம் விற்பனை ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. . 

Related Posts