Home செய்திகள் Archive by category சினிமா (Page 67)

சினிமா

சினிமா செய்திகள்

விஷால் இயக்கத்தில் நடிக்க விஜய் சம்மதம்

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு நடிகர் விஜய்யை சந்தித்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீசரை காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார். இதைத்
சினிமா செய்திகள்

ஜெயிலர் கோரிக்கை தர்மசங்கடத்தில் மாவீரன்

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும்
சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் காதல்கதையை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் படத்தின் பெயரையும் குறுமுன்னோட்டத்தையும் இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதன்படி அந்தப்படத்தின் பெயர் சபாநாயகன். இந்தப்படத்தை கமல்ஹாசனிடம், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சி.எஸ்.கார்த்திகேயன் எழுதி இயக்குகிறார்.  அசோக்செல்வனின் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள்
சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த விஷ்ணுவிஷால் – காரணம்?

தனுஷ் இப்போது அருண்மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கடுத்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் 50 ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேப்டன் மில்லருக்கு அடுத்து தனுஷ் 50 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான் வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அயலான். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் இணைந்து தயாரித்துள்ளனர். 2018 இல் தொடங்கப்பட்ட இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது… “அயலான்”
Uncategorized சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சசிகாந்த் நடவடிக்கை பெயரை மாற்றிய விஜய் டிவி

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை என்ற புத்தம் புதிய நெடுந்தொடரை 24 ஏப்ரல் 2023 திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது. இத்தொடரில் நளினி (கஜலட்சுமி), சமீர் (விக்ரம்), அஸ்வதி (வேதா), பேபிஆழியா (தன்வி), உமா (காவேரி), கிரீஷ் (சுப்ரமணி), வருண் உதய்(ஆதித்யா), சுனிதா (மிருணாளினி) மற்றும் பலர் நடிக்கிறார்கள். மோதலும்
சினிமா செய்திகள்

தள்ளிப் போனது சிவகார்த்திகேயனின் மாவீரன் – காரணம் என்ன தெரியுமா?

மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. பல தடைகளைத் தாண்டி அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து
சினிமா செய்திகள்

தனிவிமானம் பலகோடி செலவு – இந்தியத் திரையுலகை வியக்க வைக்கும் தமிழ் நடிகர்கள்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின்செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று வெளியாகி பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம்ரவியும் நடித்துள்ளார்கள். இவர்களோடு த்ரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், ஜெயராம் உட்பட ஏராளமானோர்
Uncategorized சினிமா செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் – புதியபட விவரம்

விஷால் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர, விஷால் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட துப்பறிவாளன் 2 படம் பாதியில் நிற்கிறது. இவற்றிற்கடுத்து மூன்று படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் விஷால் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்போது இன்னொரு புதிய படத்தில் நடிக்க
சினிமா செய்திகள்

சூர்யா 42 பெயர் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆகஸ்ட் 21,2022 இல் தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படம்,வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி