சினிமா செய்திகள்

நடிகர் அசோக்செல்வன் திருமணம் – விவரங்கள்

2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானார் அசோக்செல்வன். அதன்பின் தெகிடி படத்தில் நடித்தார். அந்தப்படம் நன்றாகப் போனதால் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

ஓ மை கடவுளே, போர்த்தொழில் ஆகிய படங்களின் வெற்றியால் தற்போது நிறையப்படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் அவருக்குத் திருமணம் நடக்கவுள்ளது.

செப்டம்பர் 13 ஆம் தேதி நெல்லையில் நடக்கவிருக்கிறது.செப்டம்பர் 17 சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி.

மணமகளும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்தான்.

நடிகர் அருண்பாண்டியன் மூத்தமகள் கீரத்திபாண்டியன்தான் மணமகள். அவர் தும்பா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக்க் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இருவீட்டார் சம்மதம் பெறக் காத்திருந்தனராம். தற்போது அவர்கள் இருவர் வீட்டிலும் ஒப்புக்கொண்டதால் திருமணம் செய்யவிருக்கிறார்கள்.

அடுத்த மாதம் திருமணம் என்பதால் இம்மாத இறுதியில் திருமணத்தை அறிவிக்கவிருக்கிறார்களாம்.

ஆனால் அதற்கு முன்னதாகவே திருமண அழைப்பு அச்சடித்து நெருங்கிய உறவினர்கள் மற்றும முக்கியப்புள்ளிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related Posts