ஜூலை 13 அன்று வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா ஜூலை 24 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2டி ராஜ்சேகர் பாண்டியன்,சத்யராஜ், பொன்வண்ணன்,சரவணன்,சூரி,மாரிமுத்து,இளவரசு, ஸ்ரீமன்,மனோஜ் குமார்,நாயகி சயீஷா,பிரியா பவானி ஷங்கர்,அர்த்தனா பினு,
நடிகர்
சிவகார்த்திகேயன் இப்போது சீமராஜா படத்தை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவிக்குமார் இயக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன் ராஜேஷ் இயக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அந்தப்படத்தில் நாயகியாக
நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி அவருடைய ரசிகர்கள் நிறைய நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அவை எல்லாவற்றையும் விட சிறப்பான ஒரு திட்டத்தையும் இன்று முதல் நடைமுறைப் படுத்தவிருக்கிறார்களாம். தமிழகம் முழுதும் நானூறு அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு கழிவறை கட்டித் தருவதென்றும் கட்டித் தந்து விட்டு வந்துவிடாமல், அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதென்றும்
சூர்யாவின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இரத்ததானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நற்செயல்களுடன் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவிருப்பதாக சூர்யா ரசிகர் மன்றத்தினர் சொல்லியிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திர மாநிலங்களிலும் பிறந்தநாள் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன . மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக
தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் தனுஷுடன் சசிகுமாரும் கலந்து கொண்டார். சசிகுமாரோடு படப்பிடிப்பில் இருக்கிறோம் , மூன்று இயக்குநர்கள்
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் சீமராஜா. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பாடல் வெளியீட்டுவிழாக்கள் சென்னையில் ஏதோ ஓர் அரங்குக்குள்
சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நடிகர் பார்த்திபன், இந்நிகழ்வு குறித்த செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அதில்…. அறுத்தெறியுங்கள்!!!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்
மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மாரி 2’ படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு























