சினிமா செய்திகள் நடிகர்

மதுரையில் பிரமாண்டமாக நடக்கும் சீமராஜா விழா – ரசிகர்கள் உற்சாகம்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் சீமராஜா.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

பாடல் வெளியீட்டுவிழாக்கள் சென்னையில் ஏதோ ஓர் அரங்குக்குள் நடக்கும்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவை மதுரையில் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகம் தந்திருக்கிறது.

Related Posts