December 18, 2025
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸில் ஓவியா சொன்னது நடக்குமா?

ஜூன் 17 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்றனர். அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேற இறுதிப்போட்டியில் ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் இருந்தனர்.

29/9/18 அன்று கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாங்கிய ஜனனி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு மேல் விஜயலட்சுமியும் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.

இப்போது, ரித்விகா, ஐஸ்வர்யா இருவரும் இறுதிப்போடியாளர்களாக இருக்கிறார்கள். இன்று இரவு 8 மணிக்கு யார் வெற்றியாளர் என்பது தெரியும்.

செப்டம்பர் 12 ஆம் தேதியே பிக்பாஸ் புகழ் ஓவியா, ஐஸ்வர்யாதத்தா என்கிற பெயரை மட்டும் ட்வீட் செய்திருக்கிறார்.

அது எதற்காக? என்பது பற்றி அவர் எந்த விளக்கமும் சொல்லவில்லை. ஆனால் அதில் கருத்துத் தெரிவித்துள்ள பலரும் பிக்பாஸ் 2 இன் வெற்றியாளராக ஐஸ்வர்யாதான் இருப்பார் என்பதையே ஓவியா சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அக்கருத்துகளை உறுதி செய்யும் விதமாக இறுதிப்போட்டியாளராக ஐஸ்வர்யா வந்து நிற்கிறார்.

ஓவியா சொன்னது நடக்குமா? என்பது இர்வு எட்டு மணிக்குத் தெரியும்.

Related Posts