சொந்த அப்பாவின் ஆசை – நிறைவேற்றுவாரா நயன்தாரா?
நயன்தாரா இப்போது, நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இவற்றில், நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறதாம்.
இவற்றிற்கடுத்து மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இந்தி நடிகர் ஷாருக்கான் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பவர்கள் பட்டியலில் நயன்தாரா பெயரும் இருக்கிறது.
இப்படியாக, அவருடைய திரைத்துறை பயணம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தாலும் சொந்த வாழ்க்கையில் ஒரு துயரம் அவரைச் சூழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆம், நயன்தாராவின் அப்பா குரியன்கொடியத்து மிகவும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறாராம். பெரிய அளவில் சிகிச்சைகள் எடுத்தும் அவர் முழுமையான நலம் பெறவில்லை என்கிறார்கள்.
அண்மையில் அவசரமாக தனிவிமானம் மூலம் நயன்தாரா கொச்சி சென்றது கூட தந்தையின் உடல்நலம் குன்றியதால் தான் என்றும் சொல்லப்படுகிறது.
நயன்தாராவின் அப்பா, மகளைத் திருமணக் கோலத்தில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்றும் அதுகுறித்து பலமுறை அவரிடம் பேசியும் பிடிகொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இப்போது அப்பாவின் உடல்நிலை குன்றியிருக்கும் நிலையில் அவருடைய ஆசையை நயன்தாரா நிறைவேற்றிவைத்தால் நல்லது என்று அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
செய்வாரா நயன்தாரா ?












