சினிமா செய்திகள்

12 கோடி பாக்கி – விடாமுயற்சியின் விடாமுயற்சி

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி.இப்படத்தில்,த்ரிஷா, அர்ஜூன்,ரெஜினா,ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் பிப்ரவரி 6.2025 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம், 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் என்கிற ஆங்கிலப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.

அண்மையில் இப்படம் குறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் மகிழ்திருமேனி இதை உறுதிப்படுத்தியுள்ளது.

அவர், இப்படத்தின் மூலக் கதை என்னுடையது இல்லை.அஜித் சார் நடிப்​பில் பண்ண நினைச்​சது, ஒரு ஆக்ஷன் த்ரில்​லர். இந்தப் படத்தோட கதையை அஜித் சார்​தான் சொன்​னார்.நான் ஆக்ஷன் டைரக்டரா அறியப்​பட்​டிருக்​கேன். இப்படியொரு கதைக்​களத்தை எங்கிட்ட ஏன் கொடுக்​கிறீங்​கன்னு அவர்​கிட்ட கேட்க நினைச்​சிருந்​தேன். ஆனா, அந்த வாய்ப்பை எனக்​குக் கொடுக்​காம, அவரே எனக்​குச் சொன்​னார், “மகிழ், நீங்​களும் சரி, நானும் சரி, நம்மளோட ‘கம்ஃ​போர்ட் ஸோன்’ல இருந்து வெளிய வரணும். அப்படியொரு படமா இது இருக்​கணும்“னு சொன்​னார். அவர் கொடுத்த கதையில அந்த மீட்​டருக்​குள்ள என்னால என்ன பண்ண முடி​யுமோ, அதைப் பண்ணியிருக்​கேன் என்று கூறியிருக்கிறார்.

இதன்மூலம் இது இன்னொரு படத்தின் தழுவல் என்று சொன்னதோடு அதைச் செய்யச் சொன்னது அஜீத் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிரேக்டவுன் படக்குழுவிடம் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெறாமல் அப்படத்தின் கதையை பயன்படுத்தியுள்ளதாகவும் இதனால் லைகா நிறுவனம் தங்களுக்கு 150 கோடி ரூபாய் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் பிரேக்டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாரமெளண்ட் பிக்சர்ஸ் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

அதனாலேயே இப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிப் போனது என்றும் சொல்லப்பட்டது.

இப்போது அதன் நிலை என்ன? அச்சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டதா?

இச்சிக்கல் தொடர்பாக ஆங்கிலப் படநிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதெனவும் அதில், அப்படத்தின் உரிமைக்காக சுமார் நாற்பது கோடி கொடுக்க வேண்டுமெனெ அப்பட நிறுவனம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமார் பதினேழு கோடி கொடுப்பது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் விடாமுயற்சி படத்தை வெளியிட படநிறுவனம் செய்த விடாமுயற்சி வெற்றி பெற்றுவிட்டதாம்.

இறுதியாக ஒப்புக் கொள்ளப்பட்ட தொகையில் ஐந்து கோடி கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னும் 12 கோடி கொடுக்கப்பட வேண்டுமெனவும் சொல்கிறார்கள்.அதையும் பட வெளியீட்டுக்கு முன்பு கொடுத்துவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் இம்முறை எந்தச்சிக்கலுமின்றி படம் வெளியாகிவிடுமென்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

Related Posts