October 30, 2025
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 புள்ளிவிவரங்கள் – கமல் அதிர்ச்சி

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தொடங்கியது. அதனால் இவ்வாண்டு இந்நிகழ்ச்சிக்கு வரவேற்பு இருக்குமா? என்கிற சந்தேகம் அந்தக் குழுவினருக்கே இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்நிகழ்ச்சிக்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததாம். 
இந்நிகழ்ச்சியின் மூலம் முதன்முறையாக விஜய் தொலைக்காட்சி 1000 ஜிஆர்பியைப் பெற்று சன் தொலைக்காட்சிக்கு அருகில் வந்துவிட்டது என்றார்கள்.

அதேசமயம், இந்நிகழ்ச்சி தொடர்பான புள்ளி விவரங்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலுக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லையாம்.

முந்தைய மூன்று பாகங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்குபெறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமாம்.

வார நாட்களில் எட்டிலிருந்து பத்து புள்ளிகள் வரை பெறும் பிக்பாஸ் கமல் வரும் நாட்களில் பனிரெண்டு பதிமூன்று என அதிகரிக்குமாம்.

ஆனால் இவ்வாண்டு நிலைமை தலைகீழாக இருக்கிறதென்கிறார்கள்.

வார நாட்களில் பனிரெண்டு பதிமூன்று புள்ளிகள் பெரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கமல் வரும் சனி ஞாயிறுகளில் எட்டு அல்லது ஒன்பது  புள்ளிகள் மட்டுமே பெறுகிறதாம்.

இந்தத் தகவல் அறிந்த கமல் அதிர்ச்சியாகிவிட்டாராம். அதனால்தான் போன வாரம் கையில் கட்சிச் சின்னம் அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார் போலும். 

Related Posts