பரத் கதாநாயகனாக நடித்துள்ள படம் காளிதாஸ் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ள ‘காளிதாஸ்’ படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். அறிமுக இயக்குநரான் இவர், பல நல்ல இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இயக்குநர். அத்துடன், முறையாக சினிமாவை கற்றுத்தேர்ந்த
ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களை இயக்கி கடும் விமர்சனங்களைச் சந்தித்தவர் இயக்குநர் சந்தோஷ்பி.ஜெயகுமார். விமர்சனங்கள் அதிகம் வந்ததால் குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி கஜினிகாந்த் படத்தை இயக்கினார்.நல்ல விமர்சனங்களை அந்தப்படம் பெற்றாலும் வசூலில் நிறைவாக இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனாலும் மனம் தளராமல், அரவிந்த்சாமி நடிப்பில் ‘புலனாய்வு’ என்கிற
திரைப்படத் தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்கிற திட்டமிடலும் இல்லாததும்தான். இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடாதது. அந்தந்த சமயத்தில் படங்கள் ஓட
படங்கள் ஓடுகிறதோ இல்லையோ வாரா வாரம் படங்கள் வெளியாவது மட்டும் குறைந்தபாடில்லை. டிசம்பர் 13 ஆம் தேதி பத்து படங்கள் வெளியாவதாக சொல்லப்பட்டிருக்கிறது. அவை குறித்த விவரங்கள்… 1. சாம்பியன் சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் விஷ்வா நடித்திருக்கும் படம் ‘சாம்பியன்’. கலஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய படமாகும். மிருணாளினி,
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(டிச.,7) சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் , நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினார் . அவர்,ரஜினி படம் வெளியாகும் நேரத்தில், போஸ்டர் ஒட்ட சண்டை போட்டிருக்கிறேன். இங்க சொல்றதுல தப்பில்லை. கமல் சார்
ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 7 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விழாவில் ரஜினி பேசும்போது, அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்குப் படம் சந்தோஷம். இளையராஜாக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பது போல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த க்வாலிட்டி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று (டிசம்பர் 7) நடந்தது. விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…. இந்தப் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணா, கஜினி ஆகிய முருகதாஸ் படங்கள் பார்த்து அவருடன் படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்து பேசினோம். நான் சிவாஜியும், அவர் இந்தியில் கஜினியும் செய்தார். நான்
ராசி, நட்சத்திரம், சோதிடம் ஆகியனவற்றில் மூழ்கி இருக்கும் நாயகன் ஹரீஷ்கல்யாணுக்கு திருமணம் தாமதமாகிறது. பார்க்கும் பெண்களிடமெல்லாம் ராசி ,நட்சத்திரம் கேட்பதால் பலரும் தெறித்து ஓடுகின்றனர். உடன்வேலை செய்யும் பெண் இவரை உருகி உருகி காதலித்தாலும் ராசிப் பொருத்தம் இல்லை என நிராகரிக்கிறார். அப்படிப்பட்டவருக்கு ஒரு காதல், அது முறிந்து போகிறது. காதல் போனால் சாதலா? இன்னொரு காதல்
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று இரவு (டிசம்பர் 6) சென்னை லீலாபேலஸ் நட்சத்திரவிடுதியில் இந்நிகழ்வு நடந்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே
குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஜடா. இன்ரு வெளியான இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவர் ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகுச் சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ்




















