டிசம்பர் 13 ஆம் தேதி 10 படங்கள் ரிலீஸ் – பட்டியல்
படங்கள் ஓடுகிறதோ இல்லையோ வாரா வாரம் படங்கள் வெளியாவது மட்டும் குறைந்தபாடில்லை.
டிசம்பர் 13 ஆம் தேதி பத்து படங்கள் வெளியாவதாக சொல்லப்பட்டிருக்கிறது.
அவை குறித்த விவரங்கள்…
1. சாம்பியன்
சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் விஷ்வா நடித்திருக்கும் படம் ‘சாம்பியன்’. கலஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய படமாகும். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2. கேப்மாரி
ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கேப்மாரி’.விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். ஜெய்க்கு இது 25 ஆவது படம் எனில் எஸ்.ஏ.சி. இயக்கத்தில் உருவாகியுள்ள எழுபதாவது படம். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
3.காளிதாஸ்
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன்,எம்.எஸ்.சிவநேசன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காளிதாஸ்’.
பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப்படத்தில் ப்ரத் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
4.கைலா
பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரித்திருக்கும் படம் “கைலா”.
இந்தப் படத்தில் தானாநாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார்.மற்றும் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர்மனோகர் ரஞ்சன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் – பாஸ்கர் சீனுவாசன்
5.திருப்பதிசாமி குடும்பம்
ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம்.ஜி, ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா இணைந்து வழங்கும் படம் ‘திருப்பதிசாமி குடும்பம்’.
இந்தப் படத்தில் ஜே.கே, ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஒய்.எம்.முரளி, இசை – சாம் டி.ராஜ், எடிட்டிங் – ராஜா முகமது, நடனம் – தினேஷ், ஹபீப், ஸ்டன்ட் – பயர் கார்த்திக், இணை தயாரிப்பு – திருப்பூர் கே.எல்.கே.மோகன், தயாரிப்பு – பாபுராஜா, பி.ஜாஃபர் அஷ்ரப்.
இப்படத்தை இயக்கியிருக்கும் சுரேஷ் சண்முகம், சரத்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற ‘அரசு’, ‘கம்பீரம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
6.கருத்துகளை பதிவு செய்
‘கருத்துகளை பதிவு செய்’ படத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா நாயகியாக நடித்துள்ளார். ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள “கருத்துகளை பதிவு செய்” படம், சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம்.
7.தேடு
கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குநர் சுசி ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தேடு’. சஞ்சய் கதாநாயகனாக நடிக்க, ‘உறுதிகொள், வீராபுரம்’ ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சிவகாசி முருகேசன், விஜய் டிவி ‘கலக்கப் போவது யாரு’ புகழ் பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்ய, வில்சி படத்தொகுப்பை கவனிக்கிறார். இளைய கம்பன் பாடல்களை எழுத டி.ஜே.கோபிநாத் இசையமைத்துள்ளார்.
8.மங்குனி பாண்டியர்கள்
கோல்டன் குரோவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சுமதி மணிவண்ணன் தயாரித்திருக்கும் படம் மங்குனி பாண்டியர்கள்.
படித்த இளைஞர்கள் தாங்கள் பிறந்த கிராமத்தை நல்வழிப்படுத்தி, முன்மாதிரி கிராமமாக கொண்டுவர நினைக்கிறார்கள். அதற்கு ஒரு சிலரால் எதிர்ப்பு வருகிறது. அதனால் நண்பர்களில் சிலரை இழக்க நேரிடுகிறது. இதையும் மீறி அந்த கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றினார்களா? இல்லையா? என்பதை மையமாக வைத்து அரசியல் கலந்த நகைச்சுவையோடு இந்த படம் தயாராகி உள்ளது.
காதல் தண்டபாணி, பாண்டு, நெல்லை சிவா, போண்டாமணி, வாசுவிக்ரம், கம்பம் மீனா, இவர்களுடன் புதுமுகங்கள் வக்கீல் செல்வதுரை, தியாகராஜன், பிரின்ஸ், கவியரசன், ஆஷிதா, மாஸ்டர் சக்திசரண், மாதேஸ்வரன், மனோஜ், விக்ரம் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் : மணியன்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்கி இருப்பவர் ஜெபா.
இவற்றோடு 50 ரூபா என்கிற படமும்,ஆங்கிலப்படத்தின் தமிழாக்கமான ஜூமான்ஜி என்கிற படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.











