சினிமா செய்திகள்

அதர்வா தம்பி திருமண நிச்சயம் – விஜய் தலைமையில் நடந்தது

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நேற்று இரவு (டிசம்பர் 6) சென்னை லீலாபேலஸ் நட்சத்திரவிடுதியில் இந்நிகழ்வு நடந்தது.

2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா.

இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது.

இருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் என்பதால் காதல் கைகூடத் தாமதம் ஆகியிருக்கிறது.

இன்னொரு பக்கம், அண்ணனுக்குத் திருமணம் நடந்த பிறகு நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆகாஷ் சொன்னதாலும் தாமதமானதாம்.

இப்போது எல்லாம் சரியாகி, இருவீட்டாரின் ஒப்புதலுடன் திருமண நிச்சதார்த்தம் நடந்திருக்கிறது.

நிகழ்வில் அதர்வா குடும்பத்தினர், சினேகா குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டராம்.

நடிகர் விஜய் தலைமையில் இந்த நிச்சதார்த்தம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts