அரவிந்த்சாமி படத்தில் சிக்கல் – இயக்குநரின் அதிரடி முடிவு
ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களை இயக்கி கடும் விமர்சனங்களைச் சந்தித்தவர் இயக்குநர் சந்தோஷ்பி.ஜெயகுமார்.
விமர்சனங்கள் அதிகம் வந்ததால் குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி கஜினிகாந்த் படத்தை இயக்கினார்.நல்ல விமர்சனங்களை அந்தப்படம் பெற்றாலும் வசூலில் நிறைவாக இல்லை என்று சொல்லப்பட்டது.
ஆனாலும் மனம் தளராமல், அரவிந்த்சாமி நடிப்பில் ‘புலனாய்வு’ என்கிற படத்தைத் தொடங்கினார்.இந்தப் படத்தில் புலனாய்வு அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமிக்கு ஜோடி இல்லை. அவருடன் இயக்குநரும், நடிகருமான அமீர், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கியது. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் வளராமல் நிற்கிறதாம்.
இதனால், இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயகுமார் எடுத்துள்ள அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்.
ஆம், இருட்டறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கிவிட்டாராம்.
அந்தப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவிருக்கிறார். படத்தில் மூன்று நாயகிகள் இருக்கிறார்களாம்.படத்துக்கு ரெண்டாவது குத்து என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.
மிகவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.
மறுபடி அவரை ஆபாசப் படம் எடுக்க வச்சுட்டீங்களேப்பா..











