தமிழ்த்திரைப்படத் துறையை ஆட்டுவிக்கும் முக்கிய அமைப்பு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம். இச்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நேற்று (டிசம்பர் 22 ) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 2020 பொங்கலையொட்டி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேற்று ( டிசம்பர் 22) மதியம் ஒளிபரப்பானது. டிசம்பர் 7
நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. இந்தச் செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது….. தர்பார் இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. எனது படப்பிடிப்பு
இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’.டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா டிசம்பர் 21 அன்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது…. நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார். பாடலாசிரியர் ஜிகேபி
Pancharaaksharam Tamil Movie Trailer #2 exclusively on Trend Music. Pancharaaksharam movie ft. Santhosh Pratap, Ashwin Jerome, Gokul, Madhu Shalini and Sana Altaf in lead roles. Directed by Balaji Vairamuthu, Music composed by Sundaramurthy KS, Produced by Vairamuthu under the banner Paradox Productions. For more latest Tamil Movie songs, Stay tuned to Trend Music:-
தொடர்ந்து தனுஷ் படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் தனுஷ் நடித்த ‘அசுரன்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். ‘அசுரன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தியத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’. இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதிராவ் மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது 2020 சனவரி 24 ஆம் தேதி படம் வெளியாகும் என்று
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசியல்வாதி சத்யராஜ். சட்டமன்ற உறுப்பினரும் கூட. அம்மா செளகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். ஜோதிகா தன் தம்பி காணாமல் போனதால் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறார். கோவாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் கார்த்திதான் சத்யராஜின் காணாமல் போன மகன் என்று தகவல் வர கோவா சென்று மகனை அழைத்துவருகிறார் சத்யராஜ்.
மாணவர்களின் திறமைகளை அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடாதீர்கள் என்கிற கருத்தை வலியுறுத்திச் சொல்கிற படம் தான் ஹீரோ. சின்ன வயதில் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாகவேண்டும் என ஆசைப்படுகிற சிவகார்த்திகேயன் வளர்ந்து வாலிபனானதும் தவறான வேலைகள் செய்கிறார். தன்னை நம்பி வருகிற ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிற நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளில் அவருடைய அறிவுக்கண் திறக்கிறது.
படத்தின் நாயகி தானாநாயுடு. எழுத்தாளரான அவர், பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நாவல் எழுதவிரும்புகிறார். . தோழிகளுடன் சேர்ந்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார். பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்குகிறார். இன்னொரு பக்கம், ஒரு தாய் அவருடைய சிறுவயது மகள் ஆகியோர் தற்கொலை




















