இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு
கனவுகளையே உணவாக உண்டு வாழும் திரைப்பட உதவி இயக்குநர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது. உதவி இயக்குநரான நாயகன் சந்தோஷ்,உறவினரின் முகவரியைத் தொலைத்துவிட்ட நாயகி சாந்தினியைக் காண்கிறார். அவருக்கு உதவி செய்யப்போக எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கிறது
பிங்பேக், டார்டில்ஸ், காக்கா கடி, ஹேய் அம்மு ஆகிய நான்கு கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து காதல் வடிவில் மனிதநேயத்தைப் பறைசாற்றுவதுதான் சில்லுக்கருப்பட்டி. குப்பை பொறுக்கும் சிறுவனின் நேர்மை, கோடீஸ்வர சிறுமியின் கள்ளங்கபடமற்ற அன்பு, ஆமைகளின் இனப்பெருக்கம் குறித்து கவலைப் படும் உயிர்நேயவாதிகளின் சொந்த வாழ்வில் ஏற்படும் மாற்றம், உலகத்தால் கைவிடப்பட்டதாக உணரும் ஒருவனுக்குக்
எதிர்பாரா வகையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணையும் அதன் இறுதியில் கிடைக்கும் அதிர்ச்சி தரும் விடையும்தான் இந்தப்படம். காதலாகிக் கசிந்துருகி இணைந்து வாழ்கின்றனர் லிஜேஷும், காயத்ரியும். காதல் என்றால் கூடவே மோதலும் இருக்கும்தானே. அப்படியான சந்தர்ப்பத்தில் ஓர் இரவில் காயத்ரி கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையைச் செய்தது யார் என்ற
டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா
எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் பட்டாஸ்.இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் 2020 பொங்கல் திருநாளையொட்டி
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவை சின்னியம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 150 திரையரங்கு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், நட்சத்திர
விஷால் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இலண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. அண்மையில் அங்கிருந்து படக்குழுவினர் சென்னை திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் கே.பாக்யராஜ் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு 16.12.2019 தேதியிட்டு எழுதிய கடிதம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதன் விவரம்…. 16.12.2019 தேதியில் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் எழுதிய கடிதத்தில்
சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள்’. சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தை இயக்கிய மிலிந்த்ராவ், அதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்படத்தை விக்னேஷ்சிவன் தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம்




















