சென்னை புறநகர் பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக லைகா படத்தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவானது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜெகமே தந்திரம். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒய் நாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இலண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை
விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10 விழுக்காடு டிடிஎஸ் (TDS) வரியை முற்றிலுமாக இரத்து செய்யவேண்டும் இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக
உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இரண்டுமே கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழ்த் திரையுலகில் உருவாகி வரும் படங்களின் படப்பிடிப்புகளும்
விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று (மார்ச் 15) மாலை சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. அவ்விழாவுக்கு ஊடகங்களுக்கும் விருந்தினர்களுக்கும் அழைப்பில்லை, படக்குழுவினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா கலந்து கொண்டிருந்தார். அவர்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று மாலை நடந்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற போது படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். அச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் விஜய் வீட்டில் சோதனைகள் நடந்தன. இந்தப்படத்தின் பாடல்விழா நடக்கிற செய்தி வெளீயே வந்ததும்
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அனிருத், லோகேஷ் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் விஜய் பேசியதாவது…… என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகள் அனைவருக்கும் வணக்கம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. ‘மாஸ்டர்’
குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளில் ஆண்கள் பக்கம் குறையிருந்தால் அதை நிவர்த்தி செய்து குழந்தை உண்டாக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்று விந்துதானம்.அதை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் தாராள பிரபு. மிகவும் ஆழமான உணர்வுப் பூர்வமான விசயத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள். நாயகன் ஹரிஷ்கல்யாண், கால்பந்து விளையாட்டு வீரருக்கு உரிய துடிப்புடன்
ஆணவக்கொலைகளை விமர்சித்த படம் கன்னிமாடம். நல்ல வரவேற்பைப் பெற்ற அப்படத்தின் இயக்குநர் போஸ்வெங்கட் புதியபடமொன்றை கதை எழுதி இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும்,





















