Home Articles posted by cadmin (Page 387)
சினிமா செய்திகள்

இளையராஜாவுடன் முரண்பாடு கார்த்திக்ராஜாவுடன் உடன்பாடு – மிஷ்கின் முடிவு

மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, பிசாசு மற்றும் அண்மையில் வெளியான சைக்கோ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இளையராஜாவுடன் முரண்பட்டுக் கொண்டாராம் மிஷ்கின்.இனிமேல் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற
செய்திக் குறிப்புகள்

ஸ்ருதிஹாசனின் புதிய திட்டம்

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களுடன் உரையாட நிறைய நேரம் செலவிட்டு வருகிறார். தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள புதிய தளத்தில் காலடி வைக்கிறார். ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல்கலை, ஒப்பனை குறிப்புகள் என தனது சமூக ஊடக ரசிகர்களுக்காக செய்து வரும் ஸ்ருதி, தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத
செய்திக் குறிப்புகள்

அருள்நிதி தயாரிப்பாளர்களின் சொத்து – ஃபைவ் ஸ்டார் கதிரேசன் புகழாரம்

தனித்துவம் மிக்க கதைக் களத்தில், தனது பாத்திரப்படைப்பு மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதா என்பதை மிகுந்த ஆர்வத்துடன் கவனமாகத் தேர்வு செய்து நடிப்பதுதான் நடிகர் அருள்நதியின் வழக்கம். அதனால்தான் அவர் பாராட்டப்படும் கலைஞனாக இருப்பதுடன், அவரது படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் தேடித்தருவனவாகவும் அமைகின்றன. தொடர் வெற்றிகளை ஈட்டி வரும் அருள்நிதி தற்போது நடிக்க
சினிமா செய்திகள்

கைவிடப்பட்ட சிம்பு படம் – மாநாடு தொடங்குகிறது

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஐதராபாத்தில் தொடர்ந்தது. கொரோனா சிக்கல் காரணமாக அந்தப் படப்பிடிப்பு தடைபட்டது. ஊரடங்கு நீண்டு கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தைத் தொடர்ந்து எடுக்கும் முடிவை படக்குழு கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது. திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்தாலும் இந்தப்படத்தில் சுமார் இரண்டாயிரம்
சினிமா செய்திகள்

லாக்கப் படச்சிக்கல் தீர்வு என்ன? தொழிலாளர்கள் குழப்பம்

மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் முதன்முறை இயக்கியுள்ள படம் லாக்கப். இந்தப் படத்தில் வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதில் முதன் முறையாக வெங்கட் பிரபு வில்லனாக நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகள்

வாலியா? வரலாறா? அஜீத் முடிவு என்ன?

அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜீத்தின் சந்தை மதிப்பு உயர அந்தப்படம் காரணமாக இருந்தது. அதேபோல அஜீத் மூன்று வேடங்களில் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வரலாறு.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத், அசின் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இப்போது இவ்விரு
சினிமா செய்திகள்

மாஸ்டர் படம் ஓடிடி முறையில் வெளியிடப்படுமா? – தயாரிப்பாளர் பதில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் 9,2020 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனா சிக்கல் காரணமாக இன்னும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், மாஸ்டர் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வரும். ஆனால் அதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான செய்தி
சினிமா செய்திகள்

திரையரங்குகள் திறப்பு புதிய படம் வெளியீடு – கலைப்புலிதாணு லலித்குமார் வாழ்த்து

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் தமிழ்த்திரையுலகிலும் இங்கும் அப்படி நடக்குமோ? என்கிற கவலை வந்தது. ஆனால், அங்கு வரவேற்பில்லாமல் போனதற்குக் காரணம் புதிய படங்கள் வெளியாகததுதான் என்று சொல்லப்படுகிறது.அதேநேரம் இப்போது நடக்கும் நிகழ்வு
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயரிய விருது – கமல் தனுஷ் உள்ளிட்ட 36 கலைஞர்கள் கோரிக்கை

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி தமிழ்த்திரையுலைலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைக் கடிதம்……. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர், மாண்புமிகு அமைச்சர், தகவல், ஒலிபரப்பு, இந்திய அரசு, புது டெல்லி. பொருள்: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப் பால்கே
சினிமா செய்திகள்

இயக்குநர் கெளதம் மேனனுக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறது.