தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாரதிராஜா வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்….. என் இனிய தயாரிப்பாளர்களே… கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன்.
நடிகர் ஆர்யா இப்போது டெடி, அரண்மனை 3 மற்றும் பா.இரஞ்சித் இயக்கும் படம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் டெடி படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். அரண்மனை 3 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.பா.இரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு இன்னும் பெரும்பகுதி பாக்கி இருகிறது. இந்நிலையில், விஷால் நடிக்கும் புதிய படமொன்றில் ஆர்யா நடிக்கவிருக்கிறார்
‘சூரரைப் போற்று’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையம் வழியாக 2020 அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து 5 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக சூர்யா அறிவித்திருந்தார். பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில் முன்னின்று
சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி என்டர்டெயின்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்,நேரடியாக இணையம் வழியாக 2020 அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கவிருப்பதாக சூர்யா
நடிகர் ரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது அவருடைய 168 ஆவது படம். இதற்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி, ரஜினிக்கு ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து திட்டமிடப்படாமல் இருந்தது. இதனால், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்காது என்று தகவல் பரவியது. ஆனால் இந்தி, தெலுங்கில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு
நடிகர் அதர்வா முரளி மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்புத் துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால்
சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்தார் சூர்யா. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஹரியும் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இச்சிக்கல் குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்….
மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன்படி,சூர்யாவின் 39 ஆவது படத்தின் இயக்குநர் ஹரி. அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டது. அந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம்
கன்னடம், தமிழ், உள்பட ஐந்து மொழிகளில் வெளியான படம் கே.ஜி.எஃப். கோலார் தங்கச் சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் யஷ் நாயனாக நடித்திருந்தார். இதில் யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கன்னடத் திரையுலகிலேலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெயரைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகும்





















