சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி அளித்ததையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 14 முதல் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2020 நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து
நரமாமிசம் உண்ணும் காட்டுவாசிக் குழுவை மையமாக வைத்து நகைச்சுவை,சாகசம், திரில்லர் பாணியில் தமிழில் முதல் முறையாக உருவாகியிருக்கும் படம் “ட்ரிப்”. பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியிருக்கிறார். சாய் பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன் மற்றும் இ.பிரவீன்குமார் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
சனவரி 22 ஆம் தேதி எம் எக்ஸ் ப்ளேயர் இணையத்தில் வெளியான படம் இபிகோ 306. மருத்துவர் சாய் எழுதி இயக்கி முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தப்படம் சமுதாய அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. தேவையின்றித் திணிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு காரணமாக மாணவி அனிதா பலியான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. அப்படத்தை எழுதி
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறந்த பின்னும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளீயாகும் வரை திரையரங்குகளுக்குப் பெரிய கூட்டம் வரவில்லை. அதனால் பயந்து கொண்டிருந்த திரைத்துறையினருக்கு மாஸ்டர் படம் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இதன்விளைவாக அடுத்தடுத்த படங்கள் வெளீயீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வழக்கம் போல போட்டிகளும் வந்துவிட்டன
தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அவர் நடித்துள்ள காடன் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‘மோகன் தாஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஷ்ணு விஷால் மீது கோட்டூர்புரத்தில் உள்ள
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றதுடன், கட் ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 பெற்றிருந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை. காரணம், நீட் எனும் புதியதேர்வு முறைதான். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார். 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடந்த இக்கொடும்
சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா? நாடோடி வாழ்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நாகரீக வாழ்கையில் அவனுக்குக் கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கான விடை சொல்லும் படமாகத்
கிஷோர், சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்
சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் மூன்று. ஒன்று ஹரி இயக்கத்தில் அருவா. அப்படம் நடக்கவில்லை. இரண்டாவதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல். அப்படத்தின் படப்பிடிப்பும் எப்போது என்று சொல்லப்படவில்லை. அதன்பின் அறிவிக்கப்பட்ட படம் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம். அப்படம் பற்றிய அறிவிப்பு 2020 அக்டோபர்





















