சினிமா செய்திகள்

தள்ளிப்போன தனுஷ் படம் – ஐந்து படங்கள் ரிலீசால் போட்டி

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறந்த பின்னும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளீயாகும் வரை திரையரங்குகளுக்குப் பெரிய கூட்டம் வரவில்லை.

அதனால் பயந்து கொண்டிருந்த திரைத்துறையினருக்கு மாஸ்டர் படம் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
இதன்விளைவாக அடுத்தடுத்த படங்கள் வெளீயீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வழக்கம் போல போட்டிகளும் வந்துவிட்டன என்கிறார்கள்.

மாஸ்டர் ஈஸ்வரன் ஆகிய படங்களுக்குப் பிறகு வரவிருக்கும் பெரிய படங்கள் பட்டியலில் தனுஷின் ஜகமே தந்திரம், கர்ணன் விஷாலின் சக்ரா, கார்த்தியின் சுல்தான், சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகிய படங்கள் இருக்கின்றன.

இவை எல்லாப் படங்களுமே ஏப்ரல் வெளீயீடு என்று சொல்லப்படுவதால் போட்டி ஏற்பட்டிருக்கிறதாம்.

இவற்றில் ஜகமே தந்திரம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வேலை செய்தவர்கள் திடீரெனத் தள்ளி வைத்து ஏப்ரல் வெளியீடு என்கிறார்கள்.

அதேபோல் சக்ரா படமும் இப்போது வெளியிடவியலாமல் இருக்கிறது. ஏப்ரலில் வெளியாகும் என்கிறார்கள்.
சுல்தான் படமும் தயாராகிவிட்டதாம். கர்ணனும் டாக்டரும் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

இவை எல்லாப்படங்களும் ஏப்ரல் மாதம் வெளியீடு என்று சொல்லப்படுவதால் போட்டி அதிகரித்திருக்கிறது.

Related Posts